உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல் – டிமார்ட் ராதாகிஷனுக்கு இடம்!

0
உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல் - டிமார்ட் ராதாகிஷனுக்கு இடம்!
உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல் - டிமார்ட் ராதாகிஷனுக்கு இடம்!
உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல் – டிமார்ட் ராதாகிஷனுக்கு இடம்!

உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தாமனி அவர்கள் புதிதாக இடம் பெற்றுள்ளார்.

உலகின் பணக்காரர்கள்:

உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. அதில் வழக்கமாக இந்தியாவை சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருப்பதை சாதனை நிகழ்வாக கருதப்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டின் படி, உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய வரவாக இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தாமனி சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – பயனாளிகள் தேர்வுக்கு நிபந்தனைகள்?

2002-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட டி-மார்ட் நிறுவனம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவிலான சில்லறை வணிகத்தை செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமையிடம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிஷன் தாமனி அவர்கள் மும்பையில் ஒரு சிறிய வீட்டில் இருக்கும் மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பாடத்தை ஓராண்டு முடித்தார். அவரது தந்தை இறப்பிற்கு பின்னர், அவரின் தொழிலை விட்டு விட்டு பங்குச்சந்தை தரகர் மற்றும் முதலீட்டாளர் பணியினை புரிந்தார்.

TN Job “FB  Group” Join Now

2000 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையை விட்டு வெளியேறி, 2002 ல் டிமார்ட் நிறுவனத்தை தொடங்கினார். 2010ம் ஆண்டில் 10 கடைகள் நிறுவனத்தால் தொடக்கப்பட்டிருந்தது. 2017 ல் நாடு முழுவதும் பல கிளைகளுடன் இந்த நிறுவனம் வளர்த்திருந்தது. தற்போது 1.42 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் 98-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இவருக்கு முன்னதாக முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, அஸிம் பிரேம்ஜி, சிவ நாடார், மற்றும் லட்சுமி மிட்டல் ஆகியோர் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!