NEET தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் முறைகள்!

0
NEET தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பதிவிறக்கம் செய்யும் முறைகள்!
NEET தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பதிவிறக்கம் செய்யும் முறைகள்!
NEET தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் முறைகள்!

இந்தியாவில் ஜூலை 17ம் தேதி இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இதனை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஹால் டிக்கெட்:

இந்தியாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்புவோர் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும். நடப்பாண்டு நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வானது இந்தியாவில் 546 நகரங்களிலும் அதனை தவிர்த்து வெளியே 14 நகரங்களிலும் நடைபெற உள்ளதாக NAT தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்தாண்டு உருது, ஆங்கிலம், இந்தி, மராத்தி, அஸ்ஸாமி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். பிரிவு A யில் 35 கேள்விகள் கேட்கப்படும். பிரிவு B 15 கேள்விகள் கேட்கப்படும். அதில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளைத் தேர்வு செய்யலாம். இந்த நிலையில் இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு!

முதலில் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் ADMIT CARD NEET (UG) என்பதை கிளிக் செய்யவும். அதில் பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். அதில் உங்களது ஹால் டிக்கெட் காண்பிக்கப்படும். அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  ஒருவேளை விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்  டவுன்லோட் செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை அனுப்பலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!