NEET தேர்வு 2022 விடைக்குறிப்புகள் எப்போது வெளியீடு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
NEET தேர்வு 2022 விடைக்குறிப்புகள் எப்போது வெளியீடு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
NEET தேர்வு 2022 விடைக்குறிப்புகள் எப்போது வெளியீடு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
NEET தேர்வு 2022 விடைக்குறிப்புகள் எப்போது வெளியீடு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தற்போது நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது நீட் தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டதும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விடைக்குறிப்பு:

2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதித் தேர்வான ‘நீட்’ தேர்வு ஜூலை 17 ம் தேதி அன்று நடத்தப்பட்டது. வழக்கம் போல், இந்த ஆண்டும் நீட் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டது, தேர்வர்களுக்கு அனைத்து அறிவுறுத்தல்களும் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

இதனால் தேசிய தேர்வு முகமை (NTA) விரைந்து விடைக்குறிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, NEET 2022 விடைக்குறிப்பு நாளை வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. NEET தற்காலிக விடைக்குறிப்பு OMR தாள்களுடன் neet.nta.nic.in இல் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த ஆவணங்களை தங்கள் மின்னஞ்சலிலும் பெறுவார்கள் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

தேசிய தேர்வு முகமை தற்காலிக விடைத்தாள்கள், OMR விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் மற்றும் NEET (UG) – 2022க்கான பதிவு செய்யப்பட்ட பதில்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 30ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும் என்று முன்னதாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி NEET விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதில், உள்ள ஆட்சேபணைகளை குறிப்பிட்ட தெரிவிக்க ஒரு கேள்விக்கு ₹200 திருப்பிச் செலுத்த முடியாத கட்டணம் செலுத்த வேண்டும். வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!