![Presentation2 (7) தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/08/Presentation2-7.jpg)
தமிழகத்தில் வருகிற 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் வருகிற 3 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி நாடு முழுவதும் பொதுமுடக்கம், ஊரடங்கு, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக நாட்டில் வேலையின்மை அதிகரிக்க தொடங்கியது. படித்த இளைஞர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது நாட்டில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அனைத்து நிறுவனங்களும், தொழிற்சாலைகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்பினை அதிகரித்து வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக அரசு பல தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிக அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் செப். 3ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனத்துக்கு 12ம் வகுப்பு கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 20 வயது பெண்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வேலைவாய்ப்பு முகாம் 3 ம் தேதி வேலூரில் உள்ள ஈ.வெ.ரா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்