நீட் தேர்வுக்கான இலவச பயிற்சில் சேர மாணவர்கள் ஆர்வம் !!

0
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சில் சேர மாணவர்கள் ஆர்வம் !!
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சில் சேர மாணவர்கள் ஆர்வம் !!

நீட் தேர்வுக்கான இலவச பயிற்சில் சேர மாணவர்கள் ஆர்வம் !!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு ஆணையிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய கோரி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தது. ஆனால் மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருந்து நீட் நுழைவுத்தேர்வை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நடைபெற்று கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியாகியது. அதில் சென்ற ஆண்டை விட அரசு பள்ளிகளில் பயின்ற பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதித்தனர். அம்மாணவர்கள் அரசு இலவசமாக நடத்தும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு படித்தவர்கள் ஆவர். இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மருத்துவ படிப்புகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்ற நோக்கில் நீட் தேர்வுக்கு அவர்கள் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகளை பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இலவச பயிற்சி மூலமாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

அந்த பயிற்சி வகுப்புகளில் 8 ஆயிரத்து 132 மாணவ-மாணவிகள் சேர்ந்து படித்தனர். இவர்களில் நீட் தேர்வில் 1,633 பேர் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டது. அதில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் சுமார் 740-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து இருக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர்.

                                   

அந்த வகையில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலமே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மாணவர்களின் ஆர்வம் :

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நவம்பர் 1-ந் தேதி (நேற்று) முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பிப்பதால் வகுப்புகள் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மடங்கு மாணவ-மாணவிகள் இலவச பயிற்சி பெற விண்ணப்பித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!