
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு -பிப்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது, அந்த வகையில் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் சார்பில் நடைபெறும் தேர்வு மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை தேர்ந்தெடுக்க தேர்வுகள் நடத்தப்படுகிறது
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வுக்கு ஜனவரி 9 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது, இந்த தேர்வானது 25.02.2023 (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த தேர்விற்கு எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் படி தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க பிப்ரவரி 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.