தேசிய விருதுகளை குவித்த விஜய் சேதுபதி திரைப்படம் – முழு பட்டியல் இதோ!!

0
தேசிய விருதுகளை குவித்த விஜய் சேதுபதி திரைப்படம் - முழு பட்டியல் இதோ!!
தேசிய விருதுகளை பெற்ற விஜய் சேதுபதி திரைப்படம் -
தேசிய விருதுகளை குவித்த விஜய் சேதுபதி திரைப்படம் – முழு பட்டியல் இதோ!!

தமிழில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறப்பு திரைப்பட விருது என்ற இரண்டு பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றுள்ளது. பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் தமிழ் படத்திற்காக சிறந்த பாடகி விருதைப் பெற்றுள்ளார்.

தேசிய விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் சிறந்த சினிமாக்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளைப் பெறும் நடிகர், நடிகைகள், திரைப்படங்கள், இயக்குனர்களின் பட்டியலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். அதன்படி, மணிகண்டன் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இந்த படத்தில் தாத்தா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நல்லாண்டிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ‘இரவின் நிழல்’ படத்திற்காக மாயவா தூயவா பாடலைப் பாடிய ஷ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார். பாலிவுட் நடிகைகள் ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி), கீர்த்தி சனோன் (மிமி) ஆகியோர் சிறந்த நடிகைகளுக்கான விருதையும், அல்லு அர்ஜுன் (புஷ்பா) சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

ஆப்லைன் பணபரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ. 500 ஆக உயர்வு – RBI அறிவிப்பு!

சிறந்த தேசிய திரைப்படமாக சர்ச்சைக்குள்ளான ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் தேசிய விருதுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ராஜமௌலியின் RRR திரைப்படம் சிறந்த நடனம், இசை, சண்டைப் பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் போன்ற பிரிவுகளில் தேசிய விருதுகளைக் குவித்துள்ளது. மாதவனின் ‘ராக்கெட்ரி’ திரைப்படம் சிறந்த ஹிந்தி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!