விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி 2’ சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி 2' சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி 2' சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி 2’ சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலின் 2ம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இதில் நடிகை நதியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி சீசன் 2

ஒவ்வொரு நாளும் மக்களின் விருப்பத்திற்கேற்ற கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அவ்வப்போது சமூகத்திற்கு தேவையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறது. இந்த சீரியல் பாக்கியா என்ற இல்லத்தரசியை மையமாக வைத்து நகர்ந்து வருவதால் இதற்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகம். என்றாலும் இந்த சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனம் ஈர்க்க தவறுவதில்லை. இதற்கிடையில் அவ்வப்போது பாலியல் பிரச்சனை, விதவை திருமணம், டீனேஜ் பெண்களின் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களையும் அழகாக எடுத்துரைத்து வருகிறது இந்த சீரியல்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வீட்டை விட்டு விரட்டப்பட்ட இனியா – ரசிகர்கள் ஷாக்!

இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் சமீபத்திய கதைக்களம் குடும்ப செலவுகளை கவனிக்க முடியாமல் தடுமாறும் ஒரு இல்லத்தரசியின் போராட்டத்தை மையமாக கொண்டு நகர்ந்து வருகிறது. அதாவது, பாக்கியலட்சுமியின் மாமா ராமமூர்த்தி மாடிப்படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து படுத்த படுக்கையாகிறார். இவரை ஒரு மகள் ஸ்தானத்தில் இருந்து நன்றாக கவனித்து கொள்ளும் பாக்கியா, மருந்து வாங்குவதற்கு பணம் இல்லாமல் அவ்வப்போது தடுமாறுகிறார்.

ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் இருந்து நான் விலகுகிறேனா? நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்!

இந்த கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 2ம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும், அதில் நடிகை நதியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக வெவ்வேறு துருவங்களாக இருக்கும் குடும்பத்தின் உறவுகளை பாக்கியாவாக நடிகை நதியா எப்படி சமாளிக்க போகிறார் என்ற வகையில் வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here