‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவின் மகள் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
'பிக் பாஸ்' நமீதா மாரிமுத்துவின் மகள் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
'பிக் பாஸ்' நமீதா மாரிமுத்துவின் மகள் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவின் மகள் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நமீதா மாரிமுத்து தனது வளர்ப்பு மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பிக்பாஸ் நமீதா

மக்களின் மனம் கவர்ந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போலவே சில தெரிந்த மற்றும் தெரியாத முகங்கள் என 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட இந்த ‘பிக்பாஸ்’ சீசனும் ஆரம்பத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. குறிப்பாக, இதுவரை எந்தவொரு சீசனிலும் இல்லாத புதுமையாக திருநங்கை நமீதா மாரிமுத்து இந்த சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டார்.

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இருந்து விலகும் நட்சத்திரா? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் இந்த சீசனின் துவக்கத்திலேயே ரசிகர்களின் ஏகபோக ஆதரவை சம்பாதித்திருந்த நமீதா மாரிமுத்து கண்டிப்பாக இந்த சீசனில் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்தில், உடல்நல குறைபாடு காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் நமீதா. தொடர்ந்து சமூக சேவைகளில் ஆர்வம் செலுத்தி வந்த நமீதா மாரிமுத்து அவ்வப்போது வெளியிடும் சில போட்டோஷூட் புகைப்படங்களின் மூலமும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில், ‘பிக்பாஸ்’ நமீதா மாரிமுத்து தன்னை போலவே திருநங்கையாக மாறி இருக்கும் பிரவீனா மாயா என்பவரை தனது மகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் பிரவீனா மாயா மற்றும் நமீதா மாரிமுத்து சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நமீதாவின் மகளா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!