விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா ஹேமா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஸ். எளிமையான குடும்ப பெண்ணாக மட்டுமே இருக்கும் அவர், தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை மையமாக கொண்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின், சுஜிதா மூத்த அண்ணன் அண்ணியாக மூர்த்தி, தனம் கதாபாத்திரத்திலும், வெங்கட், ஹேமா சதீஸ் இரண்டாவது அண்ணன் அண்ணியாக ஜீவா மீனா கதாபாத்திரத்திலும், மூன்றாவது அண்ணனாக குமரன், காவ்யா முல்லை கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ஆக மாறிய ‘குக் வித் கோமாளி’ அஷ்வினின் ஆணவ பேச்சு – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அவருக்கு ஜோடியாக சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சதீஸ் பல சீரியல்களில் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொடுத்தது. இந்த சீரியலில் அவர் கர்ப்பமாக இருந்தது போல காட்டப்பட்டது. ஆனால் அவர் உண்மையாகவே கர்ப்பமாக இருந்தார். மேலும் அவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவை வாழ்த்தும் ரசிகர்கள் – எதற்காக தெரியுமா?

அவர் மகன் பெயர் சாத்விக், அவனுடைய முதல் பிறந்தநாளை சமீபத்தில் அவர் கோலாகலமாக கொண்டாடி வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் தனியாக ஹேமா டைரி என யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர் குழந்தை குறிப்புகள் குறித்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட் பற்றி பல வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் குடும்ப பெண்ணாக நம்மில் ஒருவர் போல இருக்கும் ஹேமா தற்போது இன்ஸ்டாவில் மாடல் அழகி போல நகைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது என அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!