சூப்பர் ஸ்டார் ஆக மாறிய ‘குக் வித் கோமாளி’ அஷ்வினின் ஆணவ பேச்சு – கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கும் நடிகர் அஷ்வின் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துக்கள் தற்போது நெட்டிசன்களிடம் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
நடிகர் அஷ்வின்
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் அஷ்வின் குமார். விஜய் டிவியின் ‘ரெட்டைவால் குருவி’ என்ற சீரியல் மூலம் ஒரு நடிகராக சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை அஷ்வின் குமாருக்கு மக்கள் தங்களது ஆதரவை கொடுத்து வந்தனர். ஆனால் இந்த சீரியலை அடுத்து இவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் காலப்போக்கில் மக்கள் இவரை மறந்து விட்டனர்.
“பாரதி கண்ணம்மா” ஹேமா, லட்சுமி சேர்ந்து வெளியிட்ட வீடியோ – குழந்தைகளின் சுட்டித்தனம்!
இப்படி இருக்க விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டுமாக சின்னத்திரையில் தோன்ற ஆரம்பித்தார் நடிகர் அஷ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இந்த வரவேற்பு மூலம் பல ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த நடிகர் அஷ்வின் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்திருக்கிறார். அந்த வகையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடிகர் அஷ்வினுடன் சேர்ந்து நடிகை தேஜா, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர் அஷ்வின் பேசிய சில கருத்துக்கள் தற்போது நெட்டிசன்களிடையே பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதாவது, இந்த திரைப்படத்திற்கு ஓகே சொல்வதற்கு முன்னதாக சுமார் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகளை கேட்கும் போது தூங்கி விட்டதாகவும் நடிகர் அஷ்வின் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவை வாழ்த்தும் ரசிகர்கள் – எதற்காக தெரியுமா?
நடிகர் அஷ்வினின் இந்த பேச்சால் கடுப்பான நெட்டிசன்கள் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் மூலம் அவரை கலாய்த்து வருகின்றனர். இது தவிர இப்படத்தின் இயக்குனர், நடிகர் அஷ்வினை இயக்கியது ஒரு சூப்பர் ஸ்டாரை இயக்கியது போல இருக்கிறது என கூறியதும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.