விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவை வாழ்த்தும் ரசிகர்கள் – எதற்காக தெரியுமா?

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் வினுஷாவை வாழ்த்தும் ரசிகர்கள் - எதற்காக தெரியுமா?
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் வினுஷாவை வாழ்த்தும் ரசிகர்கள் - எதற்காக தெரியுமா?
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வினுஷாவை வாழ்த்தும் ரசிகர்கள் – எதற்காக தெரியுமா?

பாரதி கண்ணம்மா தொடரில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா தேவி தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வினுஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வினுஷா தேவி:

சின்னத்திரையில் நடிகை ஆக வேண்டும் என்று காத்திருக்கும் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. மிகுந்த போராட்டங்களுக்கு இடையில், தங்களின் தனித்திறமையை காண்பித்தால் மட்டுமே போட்டி நிறைந்த உலகில் நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வகையில், பலரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வாய்ப்புகளை தேடி வருவார்கள். பாரதி கண்ணம்மா தொடரில் புகழ் பெற்ற கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வினுஷாவிற்கு போட்டோஷூட் மூலம் தான் கிடைத்தது.

விஜய் டிவி VJ மணிமேகலை, ஹுசைன் திருமணம் குறித்த விமர்சனங்கள் – அவரே வெளியிட்ட பதிவு!

பாரதி கண்ணம்மா தொடரில் கதையின் நாயகியான கண்ணம்மா வேடத்தில் முதலில் ரோஷினி ஹரிப்பிரியன் தான் நடித்து வந்தார். அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்துள்ள காரணத்தால் சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதனை பற்றிய முறையான அறிவிப்பை அவர் வெளியிட பின்னர், இனி கண்ணம்மாவாக நடிக்க போவது யார் என்று மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் எழுந்தது. அப்போது, தான் ரோஷினியை போன்ற தோற்றத்துடன் இருக்கும் வினுஷாவை அறிமுகம் செய்தார்கள்.

முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த ‘பிக்பாஸ்’ இசைவாணி – ரசிகர்கள் ஷாக்!

கண்ணம்மா கதாபாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தகுந்த நடிப்பை இவர் வெளிப்படுத்துவரா என்று ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. ஆனால் வினுஷா தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் கண்ணம்மாவாக மக்கள் மனதில் தேறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், வினுஷா விதவிதமாக உடையணிந்து நடித்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் வினுஷாவின் திறமைக்கு கிடைத்த பரிசு தான் கண்ணம்மா கதாபாத்திரம் என்றும், இன்னும் இவர் மேலும் வளர வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!