மத்திய அரசின் NAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
மத்திய அரசின் NAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
மத்திய அரசின் NAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
மத்திய அரசின் NAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகம் (NAI) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Assistant Manager cum Store Keeper பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை தொகுத்து வழங்கியுள்ளோம்.

NAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தில் (NAI) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Assistant Manager Cum Store Keeper பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Assistant Manager Cum Store Keeper பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் B.Com அல்லது ஏதேனும் ஒரு Graduation Degree மற்றும் Bookkeeping, Store Keeping பாடப்பிரிவுகளில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • AM Cum Store Keeper பணிக்கு அரசு அலுவலகங்களில் Handling Stores அல்லது Accounts போன்ற பணி சார்ந்த துறைகளில் 3 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • விண்ணப்பதாரர் அரசு அலுவலகங்களில் Parent Cadre, Department அல்லது ஒத்த பணிகளில் 8 வருடம் Pay Matrix level 2 படி ஊதியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Manager Cum Store Keeper பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level 4 படி ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

NAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி, தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் (22.05.2022) கால அவகாசம் முடிவதால் இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!