OTT ல் வெளியான திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது – உரிமையாளர்கள் அதிரடி முடிவு!
திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை திரையரங்கு உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். இதனால் புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
திரையரங்குகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி காலத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடுவதனால் நோய்த்தொற்று பரவும் விகிதம் அதிகரிக்கும் என்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து திரையரங்குகள் மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. இதனால் பிரபல நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
PNB சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதங்கள் குறைப்பு – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!
முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தததன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ரசிகர்களை சென்றடைந்து வருகிறது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் காரணமாக மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என தியேட்டர் ஓனர்கள் முடிவெடுத்துள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
மேலும் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதிக்கும் படங்களை மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதனால் திரைப்படங்கள் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.