PNB சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதங்கள் குறைப்பு – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!

0
PNB சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதங்கள் குறைப்பு - பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!
PNB சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதங்கள் குறைப்பு - பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!
PNB சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதங்கள் குறைப்பு – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!

பிரபல தனியார் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சேவைகள் நேற்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

வட்டி விகிதங்கள்

சமீபகாலமாக வங்கித்துறைகளில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும் வங்கி வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு சில வங்கிகளின் ஆன்லைன் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்பு கணக்குகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சில அறிவிப்புகளை கொடுத்துள்ளது.

செப்.1 முதல் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் – உத்தரவு நிறுத்தி வைப்பு!

இது தொடர்பாக சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி, பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.90% வட்டி விகிதம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றம் நேற்று (செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 கோடி ரூபாய்க்கு குறைவான டெபாசிட்டுகள் கொண்டுள்ள கணக்குகளுக்கு 3% முதல் 2.9% வரை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இவ்வங்கி, 100 கோடி ரூபாய் கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு 3% வட்டி விகிதத்தை கொடுத்து வந்தது. ஆனால் இந்த வட்டி விகிதம் தற்போது 2.9% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இவ்வங்கியின் FD கணக்குகளுக்கும் 2.9% முதல் 5.25% வரை வட்டி விகிதம் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!