கொரோனாவை தொடர்ந்து வீரியமாகும் குரங்கு அம்மை பாதிப்பு – சுகாதார அமைப்பு தகவல்!

0
கொரோனாவை தொடர்ந்து வீரியமாகும் குரங்கு அம்மை பாதிப்பு - சுகாதார அமைப்பு தகவல்!
கொரோனாவை தொடர்ந்து வீரியமாகும் குரங்கு அம்மை பாதிப்பு – சுகாதார அமைப்பு தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு அடுத்த தாக்குதலாக தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. தற்போது குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

குரங்கு அம்மை:

உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் தீவிரமெடுத்து பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவை குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். குறிப்பாக இந்நோய் நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது. நோயின் அறிகுறிகள் குறைந்தது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை தொடர்ந்து தோல் வெடிப்பு ஏற்படும். மேலும் இது 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். கண் வலி, பார்வை திறன் குறைதல் , மூச்சுத் திணறல், சிறுநீரின் அளவு குறைதல் போன்றவைகளும் குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை!

குறிப்பாக, இந்நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திக் கவனிக்க வேண்டும். இந்நோய் மற்ற நாடுகளை தொடர்ந்து இங்கிலாந்திலும் பரவி வருகிறது. அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1,076 ஆக அதிகரித்துள்ளது. அதில் 27 பேர் ஸ்காட்லாந்திலும், 5 பேர் வடக்கு அயர்லாந்திலும், 9 பேர் வேல்சிலும் மற்றும் 1,035 பேர் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் உள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு கழக இயக்குனர் தெரித்துள்ளார். இங்கிலாந்தை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில் உள்ள 8 நாடுகளில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் பரவுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. மேலும் குரங்கு அம்மை சில நேரங்களில் மருத்துவ சிகிச்சையில் சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் மக்கள் அதிக அளவு கூட கூடாது என்றும் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here