விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் ஷகிலா மகள் மிளா இல்லையா? ரசிகர்களுக்கு செம ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியில் ஷகிலா மகள் மிளா இல்லையா? ரசிகர்களுக்கு செம ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியில் ஷகிலா மகள் மிளா இல்லையா? ரசிகர்களுக்கு செம ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் ஷகிலா மகள் மிளா இல்லையா? ரசிகர்களுக்கு செம ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான நடிகை ஷகிலாவின் மகள் மிளா கலந்து கொள்ளப்போவதில்லை என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

‘பிக் பாஸ் 5’ தமிழ்

விஜய் டிவியில் கடந்த 4 சீசன்களாக தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’. இந்த முறை ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்க உள்ளது. இம்முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் ஆரம்பத்தில் இருந்து நடிகை ஷகிலாவின் மகளான மிளா கலந்து கொள்வார் என்று கூறப்பட்டு வந்தது. நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக விஜய் தொலைக்காட்சி சார்பில் அவர் அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – கோவத்தில் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா!

ஆனால், இன்று மிளா ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணமும் இணையத்தில் வெளியாகி உள்ளது. நாளை பிக் பாஸ் போட்டியில் ஆரம்ப நிகழ்ச்சி பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் இன்றே அந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் ஹவுஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை புகைப்படம் எடுத்து நாளை வெளியிட பத்திரிகைக்கார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பிரபல யூடியூப் சேனல் சார்பில் மிளா கலந்து கொண்டாராம். அப்படி என்றால், மிளா பிக் பாஸ் கன்டஸ்டண்ட் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் புதிய சீரியலில் சரண்யா துராட்டி – ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற இருக்கும் அனைவரும் கொரோனா காரணமாக பிரபல தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்ற நிலையில், மிளா இவ்வாறாக நிருபர் போல பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் ஒரு புதிய மாற்றமாக திருநங்கை மிளா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் கலந்து கொள்ளாமல் போவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!