TCS, Infosys, Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – விரைவில் அலுவலகத்திற்கு வரவழைக்க திட்டம்!
இந்தியாவில் பிரபல தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களாகிய TCS, Infosys, Wipro உட்பட மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வரவழைக்க ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அலுவலகம் திறப்பு
கொரோனா பேரலை காரணமாக கடந்த 2 மாதங்களாக கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதாவது கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே தற்போது கொரோனா பரவல் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை அலுவலகம் அழைக்க ஆலோசித்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 38,949 பேருக்கு கொரோனா – 542 பேர் உயிரிழப்பு!
இது தொடர்பான ET அறிக்கையின்படி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய தொழில்நுட்ப நிறுவங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், இதுவரை குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துள்ளனர். இது அந்நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் ஒரு பகுதியை மட்டும் பணிக்கு திரும்ப அழைக்கலாம் என்று சிந்தித்து வருகிறது. தற்போது வரை வெளிவந்துள்ள தகவலின் படி இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களில் 59% மற்றும் 55% ஊழியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டதாகக் கூறப்படுகிறது.
TCS ன் கடந்த வார நிலவரப்படி, இதுவரை 70% ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர இன்போசிஸின் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ் கூறுகையில், இதுவரை 230,000 டோஸ் தடுப்பூசிகள் 120,000 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் குறைந்தபட்சமாக 59% பேர் முதல் டோஸையும், 10% பேர் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
விப்ரோ நிறுவனத்தை பொருத்தளவு கடந்த ஜூன் முதல் 35,000 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில், ‘இன்றைய நிலவரப்படி, எங்கள் ஊழியர்களில் 55% க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் அந்த எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது’ என்று கூறியுள்ளார். அதன் படி தடுப்பூசி செலுத்தியவர்களது எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைக்க இந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.