தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, அரசு காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய ஆலசோசனை!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, அரசு காலிப்பணியிடங்கள் - முதல்வர் முக்கிய ஆலசோசனை!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, அரசு காலிப்பணியிடங்கள் - முதல்வர் முக்கிய ஆலசோசனை!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, அரசு காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய ஆலசோசனை!

தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அறிவிப்புகள், நகைக்கடன் முறைகேடு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரைவில் நகைக்கடன் குறித்து அரசாணை வெளியிடப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் அளவில் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, மருத்துவ கட்டமைப்பு பணிகள் போன்றவற்றால் அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வாங்கிய அனைவருக்கும் கடன்களை தள்ளுபடி செய்வது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

ஒரே நொடியில் மின்கட்டணம் செலுத்துவது எப்படி? PhonePe, BHIM & Paytm பயன்படுத்தும் முறை!

இதற்காக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்களை சேகரிக்கும் பணிகளில் கூட்டுறவு துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டு அதனை ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நகை கடன் முறைகேடு குறித்து ஆய்வு செய்ய அரசு சார்பில் மாவட்டம் தோறும் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

கூட்டுறவுத்துறை அறிவிப்புகள், நகைக்கடன் முறைகேடுகள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here