ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையில் பல்வேறு திருத்தங்களை செய்ய வழிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புகைப்படம் மாற்றுவது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டை:
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றம் – அரசாணை வெளியீடு!
தற்போது வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் புகைப்படத்தினை மாற்றுவது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயனர்கள் முதலில் UIDAI இணையதளத்தில் லாக் இன் செய்து ஆதார் அட்டை படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சென்று படிவத்தை அங்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு , பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி கருணைத்தொகை – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
ஆதார் மைய ஊழியர் ஆதார் அட்டை வைத்திருப்பவரின் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை எடுத்துக்கொள்வார். அதன்பின்பு யுஆர்என் அடங்கிய ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி ஆதார் நிலையை சரிபார்க்க முடியும். தகவல்கள் அனைத்தும் புதுப்பித்தலுக்காக பெங்களூரு மையத்தை அடைந்து பின்னர் இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். புகைப்படத்தை மாற்ற ரூ.25 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.