ஒரே நொடியில் மின்கட்டணம் செலுத்துவது எப்படி? PhonePe, BHIM & Paytm பயன்படுத்தும் முறை!

0
ஒரே நொடியில் மின்கட்டணம் செலுத்துவது எப்படி? PhonePe, BHIM & Paytm பயன்படுத்தும் முறை!
ஒரே நொடியில் மின்கட்டணம் செலுத்துவது எப்படி? PhonePe, BHIM & Paytm பயன்படுத்தும் முறை!
ஒரே நொடியில் மின்கட்டணம் செலுத்துவது எப்படி? PhonePe, BHIM & Paytm பயன்படுத்தும் முறை!

ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகள் நடந்து வரும் நிலையில் மின் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மின் கட்டணம் செலுத்தும் முறை:

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில் தேவைகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே பூர்த்தி செய்து கொள்ள முடியும். உணவு ஆர்டர் செய்வது முதல் மின்கட்டணம் செலுத்துவது வரை அனைத்து ஆன்லைன் மூலம் செய்து கொள்ள முடியும். ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகள் அதிகமாக நடந்து வரும் நிலையில் இதற்கென பல செயலிகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டணம் குறித்த விவரங்களை செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் ஒரு நிமிடத்தில் கட்டணத்தை செலுத்த முடியும்.

ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

BHIM, Paytm மற்றும் PhonePe வழியாக மின் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகளில் சற்று மாறுதல்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவு மூலம் விளக்கி கூறப்படும்.

BHIM செயலி :

கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலியுடன் வாங்கி கணக்கு இணைந்திருப்பது கட்டாயமான ஒன்றாகும். அதன்பின் அந்த செயலியில் Pay Bills என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அங்கே மின் கட்டணம் முதல் ரீசார்ஜ் வரை பல ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். அதில் எலக்ட்ரிக் பில் என்பதை தேர்வு செய்து பின் காட்டப்படும் தொகைக்கு ஓகே கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து UPI Pin டைப் செய்த மறுகணம் பில் கட்டணம் செலுத்தப்படும்.

Paytm செயலி:

பயனர்கள் முதலில் செயலிக்குள் நுழைய வேண்டும். முன்பு கொடுக்கப்பட்டிருந்தது போல முகப்பு பக்கத்தில் இருக்கும் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் என்ற பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மின்சார கட்டணம் என்பதை தேர்ந்தெடுத்து பின்பு அதில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். கட்டணம் செலுத்துபவரின் விவரத்தை டைப் செய்த பின்னர் Continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

PhonePe செயலி :

மற்ற இரண்டு செயலிகளை போலவே PhonePe செயலியில் ஒரு நிமிடத்தில் கட்டணத்தை செலுத்த முடியும். போன்பே செயலிக்குள் சென்று ரீசார்ஜ் மற்றும் கட்டணங்கள் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் எலக்ட்ரிக் பில் என்பதை தேர்ந்தெடுத்து பில் செலுத்துபவரின் விவரத்தை டைப் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து திரையில் தோன்றும் கட்டண விவரம் சரியா என்பதை சரிபார்த்து பின்பு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here