குழந்தைகளுக்கான ‘பால்’ ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
குழந்தைகளுக்கான 'பால்' ஆதார் கார்டு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
குழந்தைகளுக்கான 'பால்' ஆதார் கார்டு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
குழந்தைகளுக்கான ‘பால்’ ஆதார் கார்டு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறும் பணியை UIDAI சற்றே சுலபமாக்கி உள்ளது. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

ஆதார் அட்டை இந்தியாவில் ஒரு முக்கியமான ஆவணமாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கான அடையாளமாகவும் மற்றும் முகவரிக்கான சான்றாகவும் இது கருதப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் அதிக முயற்சி இல்லாமல் ஆதார் கார்டுக்காக விண்ணப்பிக்கக்கூடிய ஏற்பாடுகளை யுஐடிஏஐ செய்துள்ளது.

Exams Daily Mobile App Download
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு:
 • அருகிலுள்ள ஆதார் மையத்துக்கு உங்கள் குழந்தையுடன் செல்ல வேண்டும்.
 • செல்லும் போது, குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ், பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் அட்டை, சரிபார்ப்புக்கான இரண்டு ஆவணங்களின் அசல் பிரதிகள் ஆகிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்
 • 5 வயதிற்கு கீழான குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாளங்கள் தேவையில்லை.
 • அதில் ஆதார் எண் தொடர்பான விவரங்கள், மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேவைப்படும். இது நீல நிறத்தில் இருக்கும். இதனை பால் ஆதார் கார்டு என்றும் கூறுவார்கள்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு:
 • பால் ஆதார் கார்டு, குழந்தை 5 வயதினை அடையும் போது செல்லாது.
 • 5 வயதிற்கு பின்னர் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டும்.
 • ஒரு வேளை குழந்தைக்கு 5 வயது வரை ஆதார் எடுக்கப்படவில்லை என்றால் புதிதாக பயோமெட்ரிக் முறையில் ஆதார் கார்டுக்கு அப்ளை செய்ய வேண்டும்.
 • மேலும் 15 வயதிலும் குழந்தையின் ஆதார் கார்டு அப்டேட் செய்யப்பட வேண்டும்.

பெற்றோரின் ஆதாருடன் இணைப்பு :

குழந்தையின் ஆதார் அட்டை பெற்றோரின் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், பெற்றோரின் ஆதார் அட்டையில் இருந்து குழந்தையை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஆன்லைன் வழியாக குழந்தைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
 • முதலில் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களுடன் தயாராகுங்கள்.
 • இப்போது, யுஐடிஏஐ (UIDAI website) வலைத்தளத்திற்குள் நுழையவும்
  அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பிழையில்லாமல் சரியாக கொடுக்கவும்.
 • அதன் பிறகு பிக்ஸ் அப்பாயின்ட்மெண்ட் என்ற ஆப்சனை கொடுக்கவும்.
 • அதில் ஆதார் பதிவுக்கான தேதியினையும் பதிவிட வேண்டும்.
 • அதில் உங்களது அருகாமையில் உள்ள ஆதார் மையத்தினை தேர்வு செய்து கொள்ளலாம்.
 • அதன் பிறகு தேவையான ஆவணங்களுடன், Reference Number- உடன், குறிப்பிட்ட தேதியில், ஆதார் மையத்திற்கு செல்லவும்.
 • குழந்தைக்கு 5 வயதிற்கு மேல் எனில் கைரேகை, பயோமெட்ரிக் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
 • இதே 5 வயதுக்கு கீழான குழந்தை எனில் வெரிபிகேஷன் முடிந்த பின்னர் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு SMS வரும். அதன் பிறகு உங்கள் குழந்தைக்கு ஆதார் கார்டு அனுப்பப்படும்.

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!