சென்னை ராணுவ மருத்துவமனையில் புதிய வேலை – ரூ.30,000/- மாத ஊதியம் || நேர்காணல் மட்டுமே!  

0
சென்னை ராணுவ மருத்துவமனையில் புதிய வேலை - ரூ.30,000/- மாத ஊதியம் || நேர்காணல் மட்டுமே!  

 Child / Clinical Psychologist, Occupational Therapist, Data Entry Operator போன்ற பல்வேறு பணிகளுக்கென சென்னை ராணுவ மருத்துவமனையில் (Military Hospital Chennai) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் சென்னை ராணுவ மருத்துவமனை (Military Hospital Chennai)
பணியின் பெயர் Child / Clinical Psychologist, Occupational Therapist, Data Entry Operator, Speech Therapist, Special Educator, Ayah cum Sweeper
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2024, 03.02.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

சென்னை ராணுவ மருத்துவமனை பணியிடங்கள்:

சென்னை ராணுவ மருத்துவமனையில் (Military Hospital Chennai) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Child / Clinical Psychologist – 01 பணியிடம்
  • Occupational Therapist  – 01 பணியிடம்
  • Data Entry Operator – 01 பணியிடம்
  • Speech Therapist  – 01 பணியிடம்
  • Special Educator  – 01 பணியிடம்
  • Ayah cum Sweeper – 01 பணியிடம்

கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் பின்வரும் கல்வித் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Child / Clinical Psychologist – Master Degree / M.Phil (Child Psychology)
  • Occupational Therapist  – Bachelor’s Degree (Occupational Therapy)
  • Data Entry Operator – Graduate Degree
  • Speech Therapist  – Bachelor’s Degree
  • Special Educator  – B.Ed, PG Diploma
  • Ayah cum Sweeper – 08 ம் வகுப்பு

வயது விவரம்:

  • Ayah cum Sweeper பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

ஊதிய விவரம்:

  • Data Entry Operator பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Ayah cum Sweeper பணிக்கு ரூ.10,000/- என்றும்,
  • மற்ற பணிகளுக்கு ரூ.30,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

02.02.2024, 03.02.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!