ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்க்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ரேஷன் அட்டையில் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். அப்படி தங்கள் வீட்டிற்கு வந்த புது நபரின் பெயரை சேர்க்க, என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றிய விவரங்களை விரிவாக பார்ப்போம்.

ரேஷன் கார்டு:

புதிதாகப் குழந்தை பிறந்தாலோ அல்லது வீட்டில் திருமணம் செய்து புதிய பெண் உறுப்பினர் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்தாலோ நீங்கள் அவர்களின் பெயர்களை ரேஷன் அட்டையுடன் கண்டிப்பான முறையில் இணைக்கபட வேண்டும். ரேஷன் கார்டில் புதிதாக ஒரு பெயரை சேர்க்க வேண்டுமானால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே சில முக்கிய ஆவணங்களுடன் அதை ஆன்லைனில் செய்து முடிக்க முடியும். இதற்கான ஆவணங்கள் மற்றும் எப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை எச்சரிக்கை!

புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க வேண்டும் என்றால் முதலில் மருமகளின் பெயர் பழைய ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் பெயரை சேர்க்க தேவையான சான்றிதழ்களான திருமண சான்றுதல் அல்லது கணவரின் ரேஷன் கார்டு அல்லது தாய்வழி ரேஷன் கார்டு மற்றும் தாய்வழி ஆதார் அட்டை அல்லது அதில் கணவரின் பெயர் உள்ளிடப்பட்ட ஆவணங்களை பதிவிட வேண்டும். மேலும் பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டுமென்றால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் குழந்தையின் பெற்றோரின் ஆதார் அட்டை ஆகியவை தேவைப்படும்.

ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி:

1. முதலில் https://tnpds.gov.in/home.xhtml என்ற இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

2. உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. பின்னர் புதிய படிவம் திறக்கப்படும்.

Exams Daily Mobile App Download

4.புதிய உறுப்பினரின் அனைத்து தகவல்களையும் நிரப்பி கொள்ள வேண்டும்.

5.இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட 10 இலக்க தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும்.

6. பின்னர், கேப்ச்சா குறியீட்டை உள்ளிட்டு, நீங்கள் பதிவிட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். இந்த OTP ஐ உள்ளிட வேண்டும்.

7. இப்போது, நீங்கள் சேர்க்க விரும்பும் புதிய உறுப்பினரின் தகவல்களைச் சரியாக நிரப்பி கொள்ள வேண்டும்.

8. தேவையான ஆவணங்களின் நகலையும் படிவத்துடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

9. இந்த தகவம் அனைத்தும் நிரப்பிய பின்னர் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

10.அதன்பின்னர் உங்களுக்கான ஒரு பதிவு எண்ணைப் பெறுவீர்கள். இந்த பதிவு எண் வைத்து பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

11. படிவம் மற்றும் ஆவணத்தை அதிகாரிகள் சரிபார்த்தபின்னர், உங்கள் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here