தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை எச்சரிக்கை!
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு - அண்ணா பல்கலை எச்சரிக்கை!
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை எச்சரிக்கை!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு சீட் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

எச்சரிக்கை பதிவு:

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதையடுத்து கலந்தாய்வு முடிந்து 7 நாட்களுக்குள் மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

அதற்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், 2ஆம் கட்ட முன்னுரிமை கோரியுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே, இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு மோசடி நபர்கள் மாணவர்களுக்கு MAIL அனுப்பி வருகின்றனர். குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களை (NRI ) குறிவைத்து, முதல் செமஸ்டர் கட்டணத்துடன் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்புவது போல போலியாக மெயில் அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது.

Exams Daily Mobile App Download

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முன்பணம் கேட்டு வரும் மெயில்கள் போலியானது என்று தெரிவித்துள்ளது. மேலும் NRI மாணவர்களை குறிவைத்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் போலியானது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!