அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசின் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மத்திய அரசின் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மத்திய அரசின் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசின் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அரசு மேரா ரேஷன் என்ற பெயரில் தனித்துவமான மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் சேவைகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் செயலி:

மத்திய அரசு, இடம்பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் உள்ள ரேஷன் கடை களில், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்குகிறது. மேலும் ஒரே ரேஷன் திட்டத்திற்காக, ‘மேரா ரேஷன்’ எனப்படும் மொபைல் போன் செயலியும் மத்திய அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அந்த செயலியை கார்டுதாரர்கள் தங்களின், ‘ஸ்மார்ட்’ மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கார்டுதாரர்கள், ரேஷன் கார்டு எண் அல்லது ‘ஆதார்’ எண்ணை பதிவிட்டால், ரேஷன் கார்டின் கூடுதல் விபரங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்ய:
  • Mera Ration பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய முதலில் Google Play Store திறக்கவும்
  • தேடல் பெட்டியில் ‘Mera Ration’ என டைப் செய்ய வேண்டும்.
  • அதில் மத்திய அரசின் ‘மேரா ரேஷன்’ செயலி பதிவேற்றப்பட்டு இருக்கும்.
  • அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
சேவைகள்:
  1. இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம், விண்ணப்பதாரர்கள் அருகே உள்ள நியாய விலைக் கடையை எளிதாகக் கண்டறியலாம்.
  2. புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் வரும் ரேஷன் கார்டுதாரர்கள் இந்த மொபைல் செயலி மூலம் தங்களைப் பதிவு செய்து அத்தியாவசிய பொருட்களைப் பெறலாம்.
  3. மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விவரங்களை மேரா ரேஷன் விண்ணப்பத்தின் மூலம் சரிபார்க்கலாம்.
  4. கார்டுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!