அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மேரா ரேஷன் செயலி, பயனர்களுக்கு பல விதமான சேவைகளை அளிக்கிறது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் செயலி

வேலை நிமித்தமாக வேறு மாநிலத்திற்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) திட்டம் பல விதமான சேவைகளை அளிக்கிறது. இந்த ரேஷன் கார்டுகளை வைத்து பயனர் ஒருவர் நாட்டின் எந்தவொரு மூலைக்கும் சென்று ரேஷன் பொருட்களை எவ்வித தடையும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இப்போது மத்திய அரசின் ‘ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டமானது எளிதாக்கப்பட்டு மேரா ரேஷன் என்ற செயலி மூலம் இயக்கப்படுகிறது.

IND vs SA முதல் ஒருநாள் போட்டி: 6வது பௌலிங் ஆப்ஷனாக வெங்கேடேஷ் ஐயர்! KL ராகுல் பேட்டி!

அந்த வகையில் ரேஷன் சேவையைப் பெறுவதற்கான மேரா ரேஷன் செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. பொதுவாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் PDS எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இது போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

மேரா ரேஷன் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய:
  • Google Play Store க்குச் செல்லவும்
  • தேடல் பொத்தானை கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என டைப் செய்யவும்
  • மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • இப்போது பயன்பாட்டை திறந்து சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்:
  • மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் ரேஷன் கார்டு எண்ணை கொடுத்து submit செய்தால் சேவையை பதிவு செய்யலாம்
  • இதனை தொடர்ந்து பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை இது சரிபார்க்க உதவுகிறது.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் சீடிங் சேவையும் இதில் சாத்தியமாகும்.
  • பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடலாம். அதற்கு கருத்தும் தெரிவிக்கலாம்
  • இந்த செயலியில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடும் போது நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த தகவல்கள் உள்நுழைவு செய்யப்படுகிறது.
  • நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!