அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசு செயலியின் அம்சங்கள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசு செயலியின் அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசு செயலியின் அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசு செயலியின் அம்சங்கள்!

இந்தியாவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் என்னும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் முக்கிய முயற்சியாக மத்திய அரசு சார்பில் மேரா ரேஷன் எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் செயலி:

நாடு முழுவதும் அரசின் நியாய விலைக்கடைகள் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பிற மாநிலங்களுக்கு பணிக்காக குடும்பத்துடன் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் நோக்கில் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்த முன்முயற்சி ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை அனைத்து மாநில கடைகளிலும் பயன்படுத்த உதவி செய்கிறது.

மே 16 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை அறிவிப்பு!

இந்த சேவையைப் பெறுவதற்கான ஆப் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதனை மேரா ரேஷன் செயலி மூலம் சரிசெய்யலாம்.

Exams Daily Mobile App Download

Google Play Store இல் மேரா ரேஷன் (Mera Ration) எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது மத்திய Aepds குழு மூலமாக தயாரிக்கப்பட்டது. இதனை இன்ஸ்டால் செய்து தேவையான தகவல்களை உள்ளிட்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இதன் வாயிலாக பயனர்கள் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!