அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேரா ரேஷன் செயலியின் பதிவிறக்கம், பயன்பாடு மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேரா ரேஷன்:

ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது வழக்கம்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த சிக்கல்கள் தீர்ந்து விடுகின்றது. மேலும், பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெற உதவி செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். முன்னதாக மேரா ரேஷன் செயலிஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்:
  • இந்த செயலியின் மூலம் உங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதன் விலை என்ன, எவ்வளவு பெறப்பட்டது, இன்னும் எவ்வளவு பெற வேண்டும் போன்ற தகவல்களை அறியலாம்.
  • ரேஷன் கார்டில் எவ்வளவு வினியோகம் செய்யப்பட்டுள்ளது, வீட்டைச் சுற்றி எத்தனை ரேஷன் டீலர்கள் உள்ளனர், இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
  • ரேஷன் கார்டு டீலரையும் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். உங்கள் வீட்டிலிருந்து எந்த டீலர் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்ற தகவலையும் இது வழங்குகிறது.
  • டீலரின் உரிம எண் மற்றும் பெயர், முகவரி அனைத்தையும் காணலாம்.
  • ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
  • நாடு முழுவதும் நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கு அருகிலுள்ள டீலர்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும். இந்த முழு அமைப்பும் Google Maps உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!