பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகையின் மாத சம்பளம் – ரசிகரின் கேள்விக்கு நடிகை ஹேமா பதில்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா சீரியல் நடிகர்களுக்கு சம்பளம் தினந்தோறும் வழங்கப்படுமா? அல்லது மாதம்தோறும் வழங்கப்படுமா? என்று ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இதில் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளும் தங்களது அழகான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஹேமா சதிஷ், அந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2வது ஹீரோயினாக நடித்து வரும் ஹேமா, ஆரம்பத்தில் இருந்து தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பிற்கு வரும் மற்ற சீரியல் நடிகைகள் – வெளியான புகைப்படம்!
ஹேமா சீரியலில் நடிப்பதோடு தனக்கு என்று யூடியூப் சேனல் ஒன்றினையும் வைத்துள்ளார். இதில் பல விதமான வீடீயோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் இந்த மாதம் ஜூலை 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றினை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருந்தார். “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஷூட்டிங்கில் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி இருந்தார். இப்படியாக இருக்க, ரசிகர்கள் பலர் இவரிடமும் கமெண்டில் பல கேள்விகளை கேட்டு இருந்தனர்.
TN Job “FB
Group” Join Now
அதில், ஒருவர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவர்க்கும் தினம்தோறும் சம்பளம் வழங்கப்படுமா? அல்லது மாதம்தோறும் வழங்கப்படுமா? என்று கேள்வி ஒன்றினை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மீனா, நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மாத சம்பளம் தான் என்றும், ஒரு மாதத்தில் தாங்கள் எத்தனை நாட்கள் நடிக்கிறோமோ, அதற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.