வங்கிகளுக்கு மே மாத விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
வங்கிகளுக்கு மே மாத விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கிகளுக்கு மே மாத விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கிகளுக்கு மே மாத விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மே மாதத்திற்கான விடுமுறை ரிசர்வ் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சில விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பட்ட வங்கிகளிலும் வாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் விடுமுறையாக தான் எப்போதும் இருக்கும். இது தவிர மே மாதத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு வேலைகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் மே மாதம் வங்கி விடுமுறைகள், ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மே 14 மற்றும் மே 28 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை. அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதால், மே 1, மே 8, மே 15, மே 21, மே 29 ஆகிய ஐந்து நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாப்பிட கூட வழியில்லாமல் திணறும் கண்ணன், எரிச்சலடைந்த ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்து வருபவை!

அதனை தொடர்ந்து கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் அன்று பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது . ஆனாலும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் எப்பொழுதும் விடுமுறை தான் இருக்கும் என்பதால் வங்கி ஊழியர்களுக்கு இந்த பொது விடுமுறையில் ஒரு பயனும் இல்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். அதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்றும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மே 9ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாளை முன்னிட்டும், மே 19ஆம் தேதி புத்த பூர்ணிமாவை முன்னிட்டும் ஒரு சில இடங்களில் மட்டும் வங்கிகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!