சாப்பிட கூட வழியில்லாமல் திணறும் கண்ணன், எரிச்சலடைந்த ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்து வருபவை!

0
சாப்பிட கூட வழியில்லாமல் திணறும் கண்ணன், எரிச்சலடைந்த ஐஸ்வர்யா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் அடுத்து வருபவை!
சாப்பிட கூட வழியில்லாமல் திணறும் கண்ணன், எரிச்சலடைந்த ஐஸ்வர்யா - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் அடுத்து வருபவை!
சாப்பிட கூட வழியில்லாமல் திணறும் கண்ணன், எரிச்சலடைந்த ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்து வருபவை!

முல்லையின் செயற்கை முறை கருவுறுத்தலுக்காக குடும்பத்தினர்கள் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஆனால், கண்ணனுக்கு சாப்பிட கூட காசு கொடுக்காமல் இருக்கிறார்களே என ஐஸ்வர்யா எரிச்சலடைந்த சண்டை போடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு தற்போது செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற்று கொண்டிருப்பதால் நிச்சயமாக இந்த சிகிச்சை வெற்றி பெறுமா அல்லது மீண்டும் குடும்பத்தினர்கள் 5 லட்சம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவு செய்கிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

ஆனால், செயற்கை முறை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் வரை செலவாகும் என்பதால் அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என குடும்பத்தினர்கள் யோசிக்கிறார்கள். பின்பு, எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். ஆனால் இந்த சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை தான் கொடுக்கும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஒரு வேளை குழந்தை வயிற்றில் தங்காமல் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியில் முடிய கூட வாய்ப்பிருக்கிறது.

வாட்ஸ் ஆப் பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் வெளியீடு!

அப்படி தோல்வி அடைந்துவிட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சையை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இந்த 5 லட்சம் பணத்தை ரெடி செய்யவே மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். மீண்டும் 5 லட்சத்தை ரெடி செய்வது என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மிகவும் நடக்காத ஒன்றாகும். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படியாவது சிகிச்சை வெற்றி பெற்றே தீர வேண்டும் என வேண்டி இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் சாப்பிட கூட காசு இல்லாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார். சாப்பிட கூட ஜீவா, மூர்த்திக்கு கால் செய்து தான் காசு கேட்க வேண்டி இருக்கிறது. முல்லைக்காக மட்டும் இவ்வளவு செலவு செய்துவிட்டு கண்ணனை கண்டுகொள்ளவே மாட்டேங்குறாங்க என ஐஸ்வர்யா சண்டைபோடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here