‘நெடுஞ்சாலைகளில் 70 கிமீ, குறுகிய வழிகளில் 30 கிமீ’ – வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் நிர்ணயம்!

0
'நெடுஞ்சாலைகளில் 70 கிமீ, குறுகிய வழிகளில் 30 கிமீ' - வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் நிர்ணயம்!
'நெடுஞ்சாலைகளில் 70 கிமீ, குறுகிய வழிகளில் 30 கிமீ' - வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் நிர்ணயம்!
‘நெடுஞ்சாலைகளில் 70 கிமீ, குறுகிய வழிகளில் 30 கிமீ’ – வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் நிர்ணயம்!

தலைநகர் டெல்லியில் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு அதிகபட்ச வேகத்தை நிர்ணயித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாகனங்கள் செல்லும் வேகம் நிர்ணயம்:

சாலைகளில் வாகன விபத்துகளை தடுக்க போக்குவரத்துத்துறை பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. ஒவ்வொரு வாகனமும் சாலை விதிகளை பின்பற்றி பயணிக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இதன் மூலம் சாலைகளில் வாகனங்கள் சீராக செல்ல முடிகிறது. சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றால் விபத்துகள் நேரிடும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிதல், சிக்னல் விளக்குகளை கவனித்து வாகனத்தை இயக்குதல், வேக கட்டுப்பாடு போன்ற விதிகள் உள்ளது.

தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்!!

சாலைகளில் நெரிசல் மிகுந்த இடங்களில் அதி வேகமாக வாகனங்களில் பயணிக்க கூடாது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. போக்குவரத்துத்துறை ஒவ்வொரு இடங்களிலும் வேகத்தடை அமைத்துள்ளது. டெல்லியில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக வாகனங்களுக்கு அதிகபட்ச வேகத்தை நிர்ணயித்து மாநில போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தைக் காட்டிலும் 5 சதவிகிதத்துக்கு மேல் அதிகமான வேகத்தில் பயணித்தால் எச்சரிக்கை விடப்படும். அதற்கு மேல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.

  • நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் பயணிக்கும் கார்கள் மற்றும் ஜீப்புகள் அதிகபட்சமாக 70 கி.மீ செல்லலாம்.
  • குடியிருப்புகள் மற்றும் குறுகிய சாலைகளில் 30 கி.மீ வேகத்திற்குள் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இருசக்கர வாகனங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்திலும், குடியிருப்புகள் மற்றும் குறுகிய சாலைகளில் 30 கி.மீ. வேகத்திலும் பயணிக்க வேண்டும்.
  • முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகபட்சம் 60 கி.மீ. வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!