தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்!!

0
தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்!!
தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்!!
தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க மாநில அரசுகள் விதித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா நோய்த்தொற்று குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் செலுத்தப்பட்டு வருகிறது.

தங்க நகைகளை விற்பனை செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – நிதி சிக்கல்கள்!

மேலும் இதுவரை தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் 9 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏராளமான தடுப்பூசிகள் வீணானது. தற்போது பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்து உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பணிகள் தொய்வடைந்து உள்ளது. பலர் முதல் டோஸ் செலுத்தி இரண்டாம் டோஸ் கிடைக்காமல் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி அதிகளவில் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு இன்று வந்தன. தமிழக சுகாதார அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இதனை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் தடுப்பூசிகள் குளிர்சாதன வசதி உடன் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்குகளில் யூரியா பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!