IPL 2022 MI vs CSK: இன்றைய ஆட்டத்திற்கான ஒரு முன்னோட்டம் – உத்தேச XI அணி விவரம் இதோ!

0
IPL 2022 MI vs CSK: இன்றைய ஆட்டத்திற்கான ஒரு முன்னோட்டம் - உத்தேச XI அணி விவரம் இதோ!
IPL 2022 MI vs CSK: இன்றைய ஆட்டத்திற்கான ஒரு முன்னோட்டம் - உத்தேச XI அணி விவரம் இதோ!
IPL 2022 MI vs CSK: இன்றைய ஆட்டத்திற்கான ஒரு முன்னோட்டம் – உத்தேச XI அணி விவரம் இதோ!

IPL போட்டிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த MI vs CSK அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று (ஏப்ரல்.21) டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த 2 அணிகளுக்கான உத்தேச XI அணி விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

MI vs CSK

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 சீசனின் 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை இன்று (ஏப்ரல்.21) நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் எதிர்கொள்கிறது. தற்போது மோசமான நிலையில் உள்ள சிஎஸ்கே அணி லீக் நிலைகளில் 6 ஆட்டங்களில் ஒரு போட்டியில் மட்டும் வென்று இரண்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், MI அணி மோசமான செயல்திறனுடன் 6 போட்டிகளில் தோல்வியடைந்து அட்டவணையில் 10வது இடத்தில் உள்ளது.

நாட்டில் ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு?

இப்போது புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் இந்த ஜாம்பவான் அணிகள் இன்று (ஏப்ரல்.21) நடைபெறும் ஆட்டத்தில் மோதவிருக்கின்றன. இதுவரை நேருக்கு நேர் சந்தித்த 32 ஆட்டங்களில் 19 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 13 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த சீஸனின் 33 வது போட்டியில் 33வது முறையாக மோத இருக்கும் MI vs CSK அணிகளில் ஒன்று வெற்றி வாய்ப்பை பெற வேண்டும். இதில் MI அணி வெற்றிபெற்றால் அது இந்த சீசனுக்கான முதல் வெற்றியாக இருக்கும்.

ஒருவேளை CSK அணி வெற்றிபெற்றால் அவர்கள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு வாய்ப்பாக இருக்கும். இப்போது CSK அணியை பொறுத்தவரை, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில், ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து பார்முக்கு திரும்பி இருந் போதிலும் சிஎஸ்கே மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதனால், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான CSK அணி ஒரு வெற்றிகரமான ஓட்டத்தைக் கண்டுபிடித்து இறுதியாக தங்கள் பிரச்சாரத்தில் சிறிது வேகத்தைப் பெறும் என்று நம்புகிறது.

அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி தனது முந்தைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோற்றது. முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி அணி 199-4 என்ற மிகப்பெரிய ரன் குவித்தது. இதில் கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 103 ரன்களை விளாசினார். மணீஷ் பாண்டே 38 ரன்களை அணியின் ஸ்கோரில் சேர்த்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷான் (13), ரோகித் சர்மா (6) மலிவாக அவுட்டானார்கள். இருப்பினும் டெவால்ட் ப்ரீவிஸ் 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 37 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், திலக் வர்மா 26 ரன்களும், கீரன் பொல்லார்ட்டின் 25 ரன்களுடன் மும்பை அணியால் 181-9 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் MI அணி 6வது ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இப்போது தோல்வியில் துவண்டு கொண்டிக்கும் இந்த இரு அணிகளும் இன்று (ஏப்ரல்.21) நடைபெற இருக்கும் ஆட்டத்தில் வெற்றி அடையும் முனைப்பில் வரிந்து கட்டிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி இருக்க இந்த ஆட்டத்திற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் XI அணி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் உத்தேச XI:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (WK), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ்/ ரிலே மெரிடித்

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச XI:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, எம்.எஸ். தோனி (WK), ரவீந்திர ஜடேஜா (C), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!