“பாக்கியலட்சுமி” சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பள்ளி மாணவியாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனனிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியான நிலையில் அது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
நேஹா மேனன்:
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மகள் இனியா ரோலில் நடித்து வருபவர் நேஹா மேனன். அந்த சீரியல் கதைக்களத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக தான் இனியா இருந்து வருகிறார். பாக்கியாவின் மூன்றாவது மகளாக பள்ளி மாணவியாக அவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு தங்கை பிறந்ததும் சந்தோசமாக பதிவிட்ட அவர், தொடர்ந்து தங்கையுடன் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டார்.
நாகசைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை டெலீட் செய்த சமந்தா – ரசிகர்கள் ஷாக்!
திருமண கோலத்தில் அவர் நடத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் என வதந்திகளை கிளப்பி விட்டனர். அவர் அந்த செய்திகளை ஷேர் செய்து அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என பதிவிட்டார். என்ன தான் வதந்திகள் வந்தாலும் அதை சுலபமாக எடுத்துக் கொள்ளும் அவர் தற்போது மீண்டும் ஒரு போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதிலும் திருமண கோலத்தில் இருப்பதால் வதந்திகள் கிளம்பும் என்பதால் அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேப்சன் போட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் அவர் குண்டாக இருப்பதை பற்றி அதிகம் அளவு ட்ரோல்கள் வரும் நிலையில் அவற்றுக்கு எல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அவர் கியூட்டாக இருப்பதாக அதிகம் கமெண்ட்டுகள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்கள் வர தான் செய்கிறது. ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறார்.