இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் – காயம் காரணமாக மார்க் வுட் விலகல்!

0
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் - காயம் காரணமாக மார்க் வுட் விலகல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் - காயம் காரணமாக மார்க் வுட் விலகல்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் – காயம் காரணமாக மார்க் வுட் விலகல்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் காயத்தால் மார்க் வுட் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் வுட் விலகல் :

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிய இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று 1-0 முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களின் பீல்டிங் செயல்பாடுகள் நன்றாக இருந்ததாக கருத்தப்படுகிறது.

T20 உலகக்கோப்பை: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் – தினேஷ் கார்த்திக் கோரிக்கை!

இந்த போட்டியில் நான்காம் ஆட்டத்தின் போது பவுண்டரிக்கு சென்ற பந்தை பீல்டிங் செய்த மார்க் வுட் பாய்ந்து சென்று தடுத்தார். இதனால் அவருக்கு தோற்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனோடு தொடர்ந்து விளையாடியவர் தனது வழக்கமான வேகத்தினை விட குறைவான வேகத்திலேயே பந்து வீசினார். அதாவது மணிக்கு 150 kph வேகத்தில் பந்து வீசக்கூடிய மார்க் வுட் கடைசி நாளில் 93 kph வேகத்தில் தான் பந்து வீசினார்.

IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு? வெளியான தகவல்!

இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 31 வயதான மார்க் வுட் தனது காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படவுள்ளார். சமீபத்தில் தான் அணியில் மாற்றம் செய்யப்படுவதற்காக பேட்ஸ்மேன் டேவிட் மலான் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறும் போட்டிகளில் பீல்டிங்கின் போது பலரும் ரன்களை தடுத்திட இது போன்ற பீல்டிங் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் முட்டாள்தனமானது என முன்னாள் வீரர்கள் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!