கேஸ் சிலிண்டர் மானியம் வந்துருச்சா? வீட்டில் இருந்தே செக் பண்ணுங்க – எளிய வழிமுறைகள் இதோ!

0
கேஸ் சிலிண்டர் மானியம் வந்துருச்சா
கேஸ் சிலிண்டர் மானியம் வந்துருச்சா

கேஸ் சிலிண்டர் மானியம் வந்துருச்சா? வீட்டில் இருந்தே செக் பண்ணுங்க – எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய மக்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வீட்டில் இருந்தே மொபைலில் எப்படி பார்க்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கேஸ் மானியம்

இந்தியாவில் மக்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோருக்கு ரூ.237 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் சிலர் அவர்களின் மொபைல் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் இருப்பதால் எரிவாயு மானியம் வழங்கப்பட்டு இருக்கிறதா என தெரியாமல் இருக்கின்றனர். அவர்கள் வீட்டில் இருந்தே மொபைல் மூலம் மானியம் குறித்து எப்படி தெரிந்து கொள்வது என பார்க்கலாம். அதாவது அதிகாரப்பூர்வ வலைத்தளமான mylpg.in மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.

அதில் அனைத்து வகையான எரிவாயு நிறுவனங்களின் வலைத்தளங்களும் இந்த லிங்கை கிளிக் செய்ததும் திறக்கப்படும். பின் கிளிக் டு யூ கிவ் அப் எல்பிஜி மானியம் ஆன்லைனில் என்ற விருப்பம் இருக்கும், அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.பிறகு உங்களிடம் எரிவாயு உள்ள நிறுவனத்தின் விருப்பத்தை டிக் செய்ய வேண்டும். ஏற்கனவே ஓபன் செய்திருந்தால் உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பி உள்ளே செல்லலாம். இல்லை என்றால் இரண்டாவது படிவத்தில் ஆதார் எண், கணக்கு எண், IFSC குறியீடு மற்றும் LPG ஐடி எரிவாயு இணைப்புடன் பதிவுசெய்யப்பட்ட கேப்ட்சாவை நிரப்பி, சமர்ப்பி பொத்தானைத் தேர்ந்தெடுக்க பின் நீங்கள் எரிவாயு மானியத்தை எளிமையாக பார்க்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!