சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.122 சரிவு – முழு விவரம் இதோ!!

2
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.122 சரிவு - முழு விவரம் இதோ!!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.122 சரிவு - முழு விவரம் இதோ!!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.122 சரிவு – முழு விவரம் இதோ!!

சமையலுக்கு பயன்படும் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். தற்போது அந்த வகையில் நடப்பு மாதத்திற்கான சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை:

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றவையின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய கொரோனா காலத்தில் இதன் விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

PVC ஆதார் அட்டை ஆர்டர் செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!!

இதனை தொடர்ந்து மாதந்தோறும் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவது வழக்கம். தற்போது அந்த வகையில் நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.122 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி வர்த்தக சிலிண்டர் விலை இந்தியாவில் ரூ.1,473.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முன்பு ரூ.1,595.50 ஆக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் டெல்லியில் ரூ.1,473,50 ஆகவும், மும்பையில் ரூ.1,422.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,544.50 ஆகவும், சென்னையில் ரூ.1,603 ஆகவும் உள்ளது. அதேபோல் வீட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.825 ஆகவும், டெல்லியில் ரூ.809 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.835.50 ஆகவும், மும்பையில் ரூ.809 ஆகவும் மற்றும் ஐதராபாத்தில் ரூ.861.50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நீங்களும் உங்க தலைப்புகளும், உங்க தலைப்புக்கும் உங்க செய்திக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு பாப்புலாரிட்டி காக செய்தி வெளியிடுவதற்கு மூடிட்டு இருக்கலாம் இல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!