புதுச்சேரியில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி – முதல்வர் திடீர் அறிவிப்பு!

0
புதுச்சேரியில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி - முதல்வர் திடீர் அறிவிப்பு!
புதுச்சேரியில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி - முதல்வர் திடீர் அறிவிப்பு!
புதுச்சேரியில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி – முதல்வர் திடீர் அறிவிப்பு!

புதுச்சேரியில் 8 ஆம் நாளாக இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதனிடையே, முதல்வர் இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடி

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு விவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் விதவைப் பெண்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை ஆகியவை குறித்து விவாதம் செய்யப்பட்டது. மேலும், 100 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூபாய் 7000 உதவித்தொகை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை தகவல்!

அதே போல இன்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, புதுச்சேரியில் உள்ள விவசாயிகள் ரூ.13 கோடி அளவிற்கு கடன் வைத்துள்ளனர். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் மஞ்சள் குடும்ப அட்டை வைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் புதுசேரியில் மரபணு குறைபாடுகளுடன் பிறந்துள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டங்கள் நடத்துவதற்காக புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைத்து தரப்படும் எனவும், 70 முதல் 80 வயது வரையிலான முதியவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.500 அதிகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்கள் இதற்கு பிறகு தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here