தமிழகத்தில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் முனுசாமி கேட்ட கேள்விக்கு தங்கம் தென்னரசு அதிரடியாக பதிலளித்ததை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் 18ஆம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்தார். இதில் அரசின் நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதிஒதுக்கீடுகளும் இடம் பெற்றுள்ளது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.16 லட்சம் வருமானம் தரும் திட்டம்!

இதனை தொடர்ந்து முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி இன்று தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் இத்துறை தொடர்பாக பல்வேறு வகையான கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் முனுசாமி பேரவையில் கேள்வி எழுப்பியதாவது, திமுகவின் தேர்தல் அறிக்கையில் 75 சதவிகிதம் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு என்று சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தாவது, “தேர்தல் அறிக்கையில் உண்மையை தான் கூறியுள்ளோம். அத்துடன் விருந்துக்கு போனால் முதலில் சாம்பார், ரசம், மோர் எனவும் அதன் பின் கடைசியாகத்தான் பாயசம் வரும். பாயசம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நிச்சயம் பாயசம் வரும்” என்று கலப்பாக பதிலளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!