நீங்க ZOOM ஆப் யூஸ் பண்ணுவிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..உஷாரா இருங்க!

0
நீங்க ZOOM ஆப் யூஸ் பண்ணுவிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..உஷாரா இருங்க!
நீங்க ZOOM ஆப் யூஸ் பண்ணுவிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..உஷாரா இருங்க!
நீங்க ZOOM ஆப் யூஸ் பண்ணுவிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..உஷாரா இருங்க!

ஜூம் (ZOOM) செயலி மூலம் குழு வீடியோ கான்பிரன்ஸ் எளிதாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக ஜூம் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூம் செயலி பயனர்களுக்கு இந்திய கணினி அவசர நிலை குழு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ZOOM செயலி:

கடந்த வருடம் கொரோனா பேரிடர் தாக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டது. இந்த ஆன்லைன் கல்வியில் கூகுள் மீட், ஜூம் போன்ற வீடியோ கலந்துரையாடல் செயலிகள் முக்கிய பங்கு வகித்தது. பாடங்கள் மட்டுமல்ல சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் முக்கிய வேலை குறித்த கலந்துரையாடல்களும் ஜூம் செயலிகள் மூலமாகவே நடத்தப்பட்டது.

அறிமுகமாகி சில நாட்களிலேயே இந்த செயலிகள் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜூம் செயலியில் ஹாக்கர்ஸ்கள் நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு குழு கலந்துரையாடலில் உள் நுழைந்து விவரங்கங்களை திருடுவதாகாவும், பல சாதி வேலைகளை செய்வதாகவும் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது. தற்பொழுது ஜூம் ஆப்பின் பல்வேறு பாதிப்புகள் தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு ‘ஜூம்’ செயலியில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு – 4% அகவிலைப்படி உயர்வு!

Exams Daily Mobile App Download

தற்போது வங்கி கணக்கு விவரங்கள் திருடப்பட்டு பண மோசடிகள் அரங்கேறி வருகிறது. அத்துடன் பயனர்களுக்கே தெரியாமல் மொபைல் செயலிகள் வாயிலாக வைரஸ்களை பரப்பி அதன் மூலம் ஹேக்கர்ஸ்கள் டேட்டாகளை திருடி வருகின்றனர். தற்போது ஜூம் செயலியிலும் ஹாக்கர்ஸ்கள் நுழைந்து விட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு நன்மை அளிக்கிறதோ அதே அளவுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!