போலி பான் கார்டை கண்டறிவது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ!

0
போலி பான் கார்டை கண்டறிவது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ!
போலி பான் கார்டை கண்டறிவது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ!
போலி பான் கார்டை கண்டறிவது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஆன்லைன் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஆன்லைன் மோசடிகளும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது போலி பான் கார்டுகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இந்த போலி பான் கார்டை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

பான் கார்டு:

தற்போதைய கால கட்டத்தில் அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஆன்லைன் வாயிலாகவே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். அதனால் ஆன்லைன் முறையில் முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஆன்லைன் முறையில் மோசடிகளை நிகழ்த்த தினமும் புதுப்புது யுக்திகளை கண்டுபிடித்து வருகின்றனர். இதில் குறிப்பாக அவ்வப்போது பொதுமக்களிடம் இருந்து வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை பெற பல வகையான வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.

இதில் முதலாவதாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகாரி போன்று தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு உட்பட தனிப்பட்ட விவரங்களை பெறுகின்றனர். இதன் மூலமாக அவர்களின் சேமிப்பு பணம் முழுவதும் சூறையாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது போலி பான் கார்டுகளை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கண்டறிய புதிய செயலி ஒன்றை இந்திய வருமானவரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து பான் அட்டைகளுக்கும் QR குறியீடு அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக போலி பான் கார்டுகளை கண்டறிய முடியும்.

நீங்க ZOOM ஆப் யூஸ் பண்ணுவிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..உஷாரா இருங்க!

Exams Daily Mobile App Download

போலி பான் கார்டுகளை கண்டறிவதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் Enhanced PAN QR Code Reader என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இச்செயலியானது ’NSDL e-Governance Infrastructure Limited’ என்பவரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. இப்போது கேமரா, குறுஞ்செய்தி ஆகியவற்றை அணுகுவதற்கான அனுமதியை கேட்கும். இதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.

3. இதையடுத்து பின்பக்க கேமரா உதவியுடன் பான் அட்டையில் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தனிப்பட்ட விவரங்களை பெறமுடியும்.

4. இறுதியாக உங்களின் தகவல்கள் காண்பிக்கப்படும். இந்த பான் கார்டு போலியானது எனில் தகவல்கள் ஏதும் காட்டாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!