அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் நம்பர் அப்டேட் செய்வது எப்படி?
ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை அப்டேட் செய்வது மிக அவசியமான ஒன்றாகும். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிதாக இந்த வேலையை முடிக்கலாம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோக பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலையில் பெற்று பயனடைகின்றனர். இந்திய அரசின் இந்த திட்டத்தால் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் பல இடங்களில் ரேஷன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக ஒப்பு கொள்ளப்படுகிறது. ரேஷன் அட்டையில் வீட்டு உறுப்பினர்கள், முகவரி, குடும்ப தலைவர் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் தேவை ஏற்பாட்டின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை நீக்கம் செய்வதும் அவசியம். அதே போல ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது அவசியமாகும் . ஏனெனில் தற்போது ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உங்களின் தற்போதைய பயன்பாட்டு எண்ணை ஆதாரில் இணைப்பது கட்டாயம். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக எளிது. ஸ்மார்போன் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி எளிதாக ரேஷன் கார்டில் உள்ள மொபைல் என்னை மாற்றலாம். அப்போது தான் ரேஷன் கார்டு குறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.