தமிழக ரேஷன் கடைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றம் – செயலாளர் உத்தரவு!

0
தமிழக ரேஷன் கடைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றம் - செயலாளர் உத்தரவு!
தமிழக ரேஷன் கடைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றம் - செயலாளர் உத்தரவு!
தமிழக ரேஷன் கடைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றம் – செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று வரும் நிலையில் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் உத்தரவிற்கிணங்க ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளி மாநில ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றன. இந்த நிலையில் தகுதியற்றோர்கள் ரேஷன் கடைகள் வாயிலாக பயன் பெற்று வருவதால் விதிகளை மாற்ற போவதாக தகவல்கள் வந்துள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆக.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து தமிழக ரேஷன் கடைகளில் பல மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விரைவில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது ரேஷன் கடைகளை தூய்மையாக பராமரிப்பும் நோக்கில் “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் கீழ் தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் துாய்மை பணி மற்றும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்க சேவைகள் தொடர்பாக ரேஷன் கடை சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்களும் வாசகங்களும் எழுதப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் களையிழந்து அசுத்தமாக காணப்பட்ட ரேஷன் கடைகள் தற்போது வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!