தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை தினங்கள்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை தினங்கள்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தினங்கள்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு இறுதி தேர்வுக்கு பிறகு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. மேலும் இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் இருக்கும் சுவாரஸ்யங்களை பெறாமல் இருந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டது. அதனை தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெறு வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – ஏப்ரல் 4 கடைசி நாள்!

இந்த நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளனர். அதனால் மாணவர்களும் மும்முரமாக படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளது.அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!