திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோருக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோருக்கு முக்கிய அறிவிப்பு - தேவஸ்தானம் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோருக்கு முக்கிய அறிவிப்பு - தேவஸ்தானம் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டோருக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் வெளியீடு!

திருமலைக்கு செல்லும் மலைப்பாதை கனமழையால் சேதமடைந்த இருந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிகள் முடிவடைய உள்ளதால் வரும் 10ம் தேதி முதல் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள் இயக்க அனுமதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்றுடன் மழை அதிக அளவில் பெய்தது. இந்த வகையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் அதிக அளவு மழை பதிவாகியது. அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் குறிப்பாக சித்தூர், கடப்பா, அனந்தபுரம், நெல்லூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருப்பதியிலும் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக திருப்பதியில் அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் கனத்த மழையால் அதிக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மலைப்பாதை அதிக சேதம் அடைந்தது.

தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் தையல் இயந்திரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாதைகள் சேதம் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் திருமலைக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாகியது .திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அலிபிரியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் சாலையில் திருப்பி விடப்பட்டது. அந்த சேதமடைந்த மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அருகே உள்ள இணைப்பு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. மலைப்பாதையை டெல்லி, ஐதராபாத், சென்னையை சேர்ந்த ஐஐடி பேராசிரியர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா – அச்சத்தில் பெற்றோர்கள்!

எனவே கேரளா அமிர்தா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ட்ரோன் கேமரா மூலம் மலைப்பாதை பகுதியை ஆய்வு செய்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் பாதையை அமைப்பது பற்றியும், 3வது பாதை அமைப்பது பற்றியும் தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அந்த வகையில் IIT பேராசிரியர்கள் தெரிவித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலைப்பாதை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து 2 மாதங்களாக நடந்து வந்தது. இப்பொழுது அனைத்து பணிகளும் முடிவடைந்தது. இந்நிலையில் போக்குவரத்திற்கு ஏற்ற நிலையில் மலைப்பாதை உள்ளது. இதன் அடிப்படையில் வரும் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பு மலைப்பாதையை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சீரமைக்கப்பட்ட மலைப்பாதை வாகன போக்குவரத்திற்காக வருகிற 10-ந் தேதி திங்கட்கிழமை முதல் திறக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!