EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை உருவாக்குவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது எப்படி?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தின் கீழ் இணைந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் UAN எண் மிகவும் அவசியமான ஒன்றாகும். தற்போது எப்படி UAN எண்ணை ஆன்லைன் மூலமாகவே உருவாக்குவது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

UAN எண்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு அவ்வப்போது பல சிறப்பான நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் இணைந்துள்ள அனைவருக்குமே EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியுள்ளது. UAN எண் என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் வருங்கால வைப்பு நிதி கணக்கு உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட 12 இலக்க எண்ணாகும்.

Exams Daily Mobile App Download

அதாவது, ஒரு ஊழியர் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது EPF கணக்கு எண் மற்றும் உறுப்பினர் ஐடி மாறாமல் இருக்கும். ஆனால், வேலையை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றும் போது UAN எண் மாறாமல் அப்படியே இருக்கும். அதாவது, இந்த 12 இலக்க எண்ணை பயன்படுத்தி EPFO உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதிக் கணக்கை நிர்வகித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமாகவே ஒருவர் தங்களுக்கு தேவையான UAN எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு

அதாவது, EPFO உறுப்பினர் UAN எண்ணை உருவாக்கும் போது உறுப்பினரின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள், நிரந்தர கணக்கு எண் (PAN), ஆதார் மற்றும் பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) அட்டை ஆகிய அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக UAN எண்ணை உருவாக்குவது என்பதை பார்க்கலாம். முதலில், EPFO போர்ட்டலில் உறுப்பினர் இ-சேவாவில் இருக்கும் UAN ஐச் செயல்படுத்து என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, ஆதார் விருப்பத்தை தேர்வு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர், Get Authorization Pin என்பதை கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள OTP எண்ணை பதிவு செய்யவும். பின்னர், UAN ஐச் செயல்படுத்து என்கிற பகுதியை கிளிக் செய்துவிட்டால் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!