ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் புதிய சேவைகள்!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இன்று முதல் புதிய சேவைகள்!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இன்று முதல் புதிய சேவைகள்!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் புதிய சேவைகள்!

நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய அனைத்து வித ரயில் சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகள் ரயில்வே நிர்வாகம் தற்போது வாராந்திர சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில் குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய ரயில் சேவை:

இந்தியாவில் உள்ள மக்களால் அதிகளவு விரும்பப்படும் ஒரு பொது போக்குவரத்து என்றால் அது ரயில் சேவை தான். ஏனென்றால் இந்த ரயில் பயணங்கள், குறைந்த கட்டணத்தில் நாம் விரும்பிய இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லும் வசதியை வழங்குவதால் இந்த சேவையை பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு நாளும், நாடு முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பெருமளவு மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலை சீராகி, ரயில் சேவைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழித்தடங்களில் கூடுதல் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகம் வாரந்திர சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கியூட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி

  • அந்த வகையில், ஹூப்ளி சந்திப்பு(SSS HUBBALLI JN) முதல் ராமேஸ்வரம்(RAMESWARAM) வரை சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
  • இந்த சிறப்பு ரயில் ஆகஸ்ட் 6-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும்.
  • இந்த சிறப்பு ரயில்(07353) தேவநகரி, தும்கூரு, யஷ்வந்த்பூர் சந்திப்பு, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மன்னார்குடி, ராமநாதபுரம் வழியாக மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு சென்றடையும்.
  • மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07354) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 (நாளை )முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சந்திப்பு சென்றடையும்.
  • இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!