TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு - முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 23) தான் கடைசி நாள் என்பதால், தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. மேலும் ஒரு சிலர் கடைசி நாளில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் அவ்வாறு இருப்பது மிகவும் தவறான செயல் ஆகும் என்று TNPSC சார்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2A :

தமிழ்நாட்டில் நிலவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ள காரணத்தால் சமீபத்தில் tnpsc குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலம் நிறைய பட்டதாரிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு தெரிவித்து உள்ளது. மேலும் இந்த குரூப் 2 தேர்வுகளுக்கு பதவிகளாக, நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்கள் நிரப்பிட உள்ளன.

IPL T20 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் பலம் & பலவீனம் ஒரு பார்வை!

மேலும் மொத்தமாக 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக மார்ச் 23 ஆம் தேதியை அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக நாளை உள்ளது. மேலும் நாளை வரை முதல் முறை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களை பெற www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில் கடைசி நாளில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு சர்வர் டவுன் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கும் போது தவறுகள் செய்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, முடிந்தவரை முன்னரே விண்ணப்பிப்பது மிகவும் நல்லது. Selfie, Xerox புகைப்படங்கள், குடும்ப விழாக்கள், சுற்றுலா தலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம், மரம், செடி, கொடி, கட்டிடங்கள் போன்றவை பின்னணியாக கொண்ட புகைப்படங்களை இதில் சேர்க்க கூடாது. இவ்வாறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!